நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் கேமிராவும், நிர்மல் எடிட்டிங் பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.