கோலிவுட் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஸ்டிரைக்கை உடைக்க கியூப் நிறுவனத்தினர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சதி செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன

இந்த நிலையில் நயன்தாரா, மம்முட்டி நடித்த ‘புதிய நியமம்’ படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘வாசுகி’ மார்ச் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கியூப் நிறுவனத்தினர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பல்வேறு சலுகைகள் தர முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் வேறு சில தயாரிப்பாளர்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாசுகி’ படம் ரிலீஸ் ஆவதை தடுக்க தயாரிப்பாளர்காள் சங்கம் நயன்தாராவை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா இதற்கு ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்