தமிழ் திரையுலகில் நயன்தாராவுக்கு  அதிக ரசிகர்கள் இருப்பது நமக்கு தெரிந்ததே.அதில் பிரபல நடிகர்கள் பலரும் உண்டு .விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நயன் தாராவை தூக்கி செல்வேன் என்றார். ஜெயம் ரவி தனது தனி ஒருவன் படத்தின்  நயனைத்தான் நாயகியாக போடவேண்டும் என்று போராடி வென்றதாக கூறுவார்கள். இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் உண்டு.

நீண்ட நாட்களாகவே நயன் தாராவுடன் ஜோடி சேர வேண்டும் என்பது அவரது கனவு. அந்த ஆசை வேலைக்காரன் படத்தில் நிறைவேறியுள்ளது. வேலைக்காரன் பட பேச்சுவார்த்தையின்போதே நயந்தாராவைத்தான் ஹீரோயினாக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறினாராம் சிவா.

இந்த விசயத்தை நயனிடமே சிவகார்த்திகேயன் கூறினாராம்.உங்களுடன் டூயட் பாடவேண்டும் என்ற என் கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது என்றாராம் சிவா.