இந்தியன் 2′ படத்தில் நயன்தாரா?

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பிசியாகியுள்ள நிலையிலும் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு, மற்றும் இந்தியன் 2′ பட வேலைகளில் உள்ளார். இவற்றில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆர்ம்பமாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடும் தொழிலதிபர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்க்கும் கதை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நயன்தாரா, கமலுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்பதால் அவர் இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.