தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாள் படப்பிடிப்பில் அஜித் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் இன்று முதல் நயன்தாரா கலந்து கொள்கிறார்

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நயன்தாரா சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். அப்போது விமான நிலைய ஊழியர்கள் நயன்தாராவுடன் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

ஏகன், பில்லா, ஆரம்பம் படங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித் படத்தில் இணையும் நயன்தாராவுக்கு இந்த படத்தில் வலுவான கேரக்டர் என்றும், கிட்டத்தட்ட அஜித்துக்கு நிகரான கேரக்டர் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இன்று முதல் சுமார் 30 நாட்கள் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு நடைபெறும் என்றாலும் நயன்தாரா, 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இமான் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளது.