நயன்தாராவின் திடீர் மலையாள பாசம்: காரணம் என்ன?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. கோடிகளில் சம்பளம் வாங்கும் இவருக்காக பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர் கால்ஷீட்டிற்காக. அப்படி இருந்தும் குறைந்த அளவு சம்பளம் தரும் கேரள திரையுலகை நோக்கி தன் கவனத்தை செலுத்தி வருகிறார். காரணம் தொலை நோக்கு பார்வைதானாம்.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நாயகியாக நடிக்க முடியாது. ரசிகர்களும் அதனை விரும்புவதில்லை.ஆனால் மலையாள திரையுலகை பொறுத்தவரை ஊதியம் குறைவாக இருந்தாலும் வயது ஒரு பொருட்டல்ல. திருமணம் ஆனாலும் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும்,. உதாரணத்திற்கு மஞ்சு வாரியாருக்கு தற்போது உள்ள மார்க்கெட். எனவேதான் மலையாள கரையோரம் நயன்தாராவின் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.