திரிஷா, நயன்தாராவுக்கு மகளான மானஸ்வி யார் தெரியுமா?

தற்போது சதுரங்க வேட்டை படத்தில் அரவிந்த சாமிக்கு ஜோடியாக திாிஷா நடித்து வருகிறாா். இந்த படத்தில் அவா்கள் இருவருக்கும் மாறுபட்ட கேரக்டாில் நடித்து வருகின்றனா். ஆனா அவா்களுக்கு ஒரு பெண் குழந்தை 4 வயதில் இருப்பது போன்று கதையமைக்கபட்டு உள்ளது. அந்த குழந்தை கேரக்டாில் மானஸ்வி என்ற நான்கு வயது குழந்தை நடித்து வருகிறாா். அந்த குழந்தை யாரென்றால் நம்ம காமெடி ஆக்டா் கொட்டாச்சியின் மகள் தான் அது. தற்போது அரவிந்தசாமி – மானஸ்வி செண்டிமென்ட் சம்பந்த பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லங்க!! லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாரா டோரா படத்தை அடுத்து அறம் படத்திலும், இமைக்கா நெடிகள் என்ற படத்திலும் நடித்து வருகிறாா். இதில் இமைக்கா நெடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடிக்கிறாா். அரவிந்தசாமி திாிஷா படத்தை போல, இந்த படத்திலும் அம்மா மகள் பாசத்திற்கான ஒரு பாடல் சீன் உள்ளதாம். இப்படியாக அடுத்தடுத்து முன்னணி நடிகா், நடிகைகளான நயன்தாரா, அரவிந்தசாமி, திாிஷா போன்றவா்களின் மகளாக கலக்கி கொண்டிருக்கிறாா் நகைச்சுவை நடிகா் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. அதோடு மட்டுமல்ல, கண்மணி என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறாா். பரவாயில்லங்க! இந்த சிறுவயதிலேயே பல படங்களில் நடித்து வரும் மானஸ்வி மேன்மேலும் வர வாழ்த்துக்கள்.