சென்னை வேண்டாம், பெங்களுரூக்கு போயிடுவோம். நயன்தாரா

லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தில் அதர்வா தான் ஹீரோ என்றாலும் நயன்தாராவுக்குத்தான் முக்கிய கேரக்டர். அதாவது சிபிஐ கேரக்டர்.

அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஓடும் மெட்ரோ ரயிலில் நடைபெறுகிறதாம். இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் படக்குழுவினர் அனுமதி பெற்றனர். ஆனால் நயன்தாராவோ சென்னையில் படப்பிடிப்பு என்றால் ரசிகர்கள் தொல்லை அதிகமாக இருக்கும் என்று கூறி படப்பிடிப்பை பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மாற்ற சொல்லிவிட்டாராம்

நயன்தாராவே சொல்லிவிட்டால் அதற்கு மறுமொழி உண்டா? உடனே இயக்குனர் அஜய்ஞானமுத்து பெங்களூருக்கு படப்பிடிப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்.