nayadharabijili

தற்போது பிரபலம் அடைய வேண்டும் என்றால் அதுவும் ஒரே நாளில் இது நடக்க வேண்டும் என்றால் டப்மாஷ் செய்தாலே போதும் அது நடந்து விடும். அது தான் இப்போதைய ட்ரெண்டாக உள்ளது. அதுபோல முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அதை பற்றி பக்கம் பக்கமாக கதை சொல்லுவார்கள். இயக்குனர் போகும் போது வரும் போது அவர் பார்வையில் படும்படி வணக்கம் வைக்க வேண்டும்.

இந்த நிலை தற்போது மாறி வருகிறது. ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் பிரபலம் அடைந்து விடலாம். எளிதாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் ஜிமிக்கி கமல் பாடலை சொல்லாம். அந்த பாடலுக்கு ஆடிய டீச்சர் ஷெரில் ஒரே நாளில் பிரபலம் அடைந்தார். மேலும் கண் அசைவில் அனைத்து ரசிகர்களை காட்டி போட்ட பிரியா வாரியா்.

தற்போது பிஜிலி ரமேஷ் என்ற பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. இவரும் ஒரே நாளில் பிரபலமடைந்தவா். இவர் தற்போது கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற ப்ரொமோ வீடியோ பாடலில் வருகிறார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே எழுத்தாளர் சுஜாதா சொன்னது நியாபகத்திற்கு வருகிறது, இனி வரும் காலங்களில் ஒருவர் பதினைந்து நிமிடத்தில் பிரபலம் அடைய முடியும் என்று சொல்லியிருந்தது தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

பிஜிலி ரமேஷ் ரஜினியின் தீவிர ரசிகர். இவர் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களை யூட்யூபில் பேசியதன் மூலம் மிகவும் பிரபலமைடந்தார். யூ-டூப் வழியாக பிரபலமான பிஜிலி தற்போது கோலமாவு கோகிலா ப்ரொமோ பாடலில் இடம் பிடித்துள்ளார். இனிமேல் இவரும் பவர் ஸ்டார் போல சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார். அனிருத் இசையில் உருவாகி உள்ள கோலமாவு கோகிலா படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.