தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. ஹீரோயின் சப்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்யும் இவர், இமைக்கா நொடி,அறம், கொலையுதிர் காலம் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியா தெலுங்கு படம் ஒன்றிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா புரொடெக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோலமாவு கோகிலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை சுருக்கி கோகோ என பெயரிட்டுள்ளனர். அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  நயன்தாராவுடன் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.