இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகை நயன் தாரா ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஈரம், குற்றம் 23 என ரசிகர்கள் விரும்பும் வகையில் திரில்லர் கதைகளை இயக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குனர் அறிவழகன். இவர் கடைசியாக இயக்கிய குற்றம் 23 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது.

இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படத்தில் நயன்தாரா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தப் படமும் அறிவழகனின் முந்தைய படங்கள் போலவே ஆக்‌ஷன் திரில்லரான கதையம்சம் கொண்ட படம் எனத் தெரிகிறது.

மாயா, டோரா போன்ற திரில்லர் படங்களுக்கு பின் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரில்லர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.