ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த படம் தனி ஒருவன். ராஜா இயக்கிய இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான விசயம் அனைவரும் அறிந்ததே. மேலும் இதனை தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படட்5ஹ்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் ராஜா ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்திலும் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது நயன்தாரா இப்படத்தில் நடிக்கவில்லை என்று தெரிகிறது. அவருக்கு பதில் காஜல் அகர்வால், சாயிஷா ஆகிய இருவரும் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.