சிவகார்த்திகேயனை பாராட்டித் தள்ளிய நயன்தாரா….

நடிகை நயன்தாரா நடிகர் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்குனர் ராஜா இயக்குகிறார். தனி ஒருவன் படத்திற்கு அவர் இயக்கும் படம் இது. இப்படத்தில் முதன் முறையாக சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ஜோடி போட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனுடன் நடிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள நயன்தாரா “அவர் மிகவும் கலகலப்பானவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலை பளுவும் தெரியாது. எதாவது பேசி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அதேபோல், எத்தனை பக்கம் வசனம் என்றாலும், பத்தே நிமிடங்களில் மனப்பாடம் செய்து பேசி விடுவார்” என பாராட்டித் தள்ளியுள்ளார்.