உதவி இயக்குனராக புரமோஷன் ஆனார் நயன்தாரா

12:22 மணி

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா. இன்றைய இளையதலைமுறை நடிகைகளைவிட அதிக வாய்ப்புகளுடன், அதிக சம்பளத்துடனும் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகையாக உள்ளார். தொழிலில் அவர் செலுத்தி வரும் அர்ப்பணிப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கோலிவுட் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

Loading...

தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேரவனுக்கு சென்று ஓய்வெடுக்கும் நடிகைகளின் மத்தியில் தனது காட்சியின் படப்பிடிப்பு முடிந்தாலும், தொடர்ந்து ஒரு உதவி இயக்குனரை போல களத்தில் இருப்பார் நயன்தாரா என்று ‘அறம்’ படத்தின் இயக்குனர் கோபி நயினார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதையை கேட்டதும் அதிகம் இம்ப்ரஸ் ஆன நயன்தாரா, ஒவ்வொரு காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் தனது முழு ஈடுபாட்டை அவர் காண்பித்து வந்ததால் அவரை இந்த படத்தின் நாயகியாக மட்டுமின்றி உதவி இயக்குனராகவும் படக்குழுவினர் பார்த்து வருகின்றனர் என்று இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார்.,

(Visited 12 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393