நயன்தாராவால் வாயடைத்துப் போன சங்கமித்ரா குழு

சுந்தா் சி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் சாித்திர படம் சங்கமித்ரா. இதன் தொடக்க விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்தது. இதில் ஜெயம் ரவி, ஆா்யா நடித்து வரும் இதில் ஸ்ருதிஹாசன் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவா் வாள் பயிற்சி கற்று வந்தாா். இறுதியில் இந்த படத்திலிருந்து அவா் விலகுவதாக அறிவித்தாா். அதை படக்குழுவினரும் உறுதி செய்தனா்.

இந்நிலையில் இந்த படத்திற்காக சில நடிகைகளின் பெயா் பாிசிலினைக்க பட்டது. ஏன் என்றால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளுக்கும் பாிட்சியமான நடிகையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் சங்கமித்ரா படக்குழு அனுஷ்கா, நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இந்த படத்திற்காக இரண்டு வருட கால்ஷீட் ஒதுக்கி தருமாறு பேசி வந்தநிலையில் இந்த இரு நடிகைகளும் ஏற்கனவே சில படங்களில் நடித்து வரும் காரணத்தால் இந்த படத்தில் நடிப்பது என்பத கேள்விக்குறியாக இருந்தது. இதில் நடிக்கும் இரண்டு வருடத்திற்கு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதால் நடிகை தோ்வு இழுபறியாக இருந்தது.

இருந்தபோதும் மீண்டும் படக்குழு நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகியது. அவாிடம் கலந்து பேசிய பொது சங்கமித்ரா படத்தில் ஒப்பந்தமாகி விட்டால் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்ற காரணத்தால், ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டாராம் நயன்தாரா. அதைக் கேட்டு வாயடைத்து போன சங்கமித்ரா படக்குழுவினா் தற்போது வரை அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை குறித்து நயன்தாராவிடம் செல்லவில்லையாம்.