தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தெலுங்கில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘ஜெய்சிம்ஹா’ என்ற படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஸ்டில் ஒன்று சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது

நயன்தாராவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் லைக் செய்தும் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர். இந்த பாடல் பெரும் பொருட்செலவில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டு வருவதாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.