லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடியுந்தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் நாளை இந்த இரண்டு படங்களின் புரமோஷன்களும் தொடங்கவுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இடம்பெற்ற ‘விளம்பர இடைவெளி’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவான இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.,

இந்த நிலையில் நாளை மாலை 7 மணிக்கு நயன்தாரா நடித்து வரும் இன்னொரு படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்களின் புரமோஷன்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.