தென்னந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் டோரா,அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அறம் படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடா்ந்து அனைத்து படங்களும் இப்படி தான் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் நயன். தற்போது கோலமாவு கோகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாக அதிகமான லைக்ஸ் பெற்றது. நயனின் இரு காதல்கள் ஏற்கனவே தோல்வியை தழுவியது. தற்போது நயனும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இவா்கள் இதை வெளிப்படைாக சொல்ல இல்லை என்றாலும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பிப்ரவரி காதலா் தினத்தை முன்னிட்டு நயனும் விக்னேஷ் சிவனும் கைகோர்த்தபடி ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தனா்.

இந்நிலையில் ஆஸ்கார் விருது நடைபெறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார்கள். அந்த விழாவில் கலந்துக்கொள்ள சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தானா சோ்ந்த கூட்டம் படத்தின் வேலைகளில் விக்னேஷ் சிவன் பிசியாக இருந்த காரணத்தால் அவருடன் தனிமையில் இருக்க நேரம் இல்லாததால் தற்போது அமெரிக்கா சென்று பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களுக்கு தீனியாக உள்ளது.