தமிழில் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் தெரிந்ததே. இருவரும் பல இடங்களில் ஊர் சுற்றுவதும்,அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதும் வாடிக்கை.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் அம்ரிஸ்டரில் உள்ள தங்க கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவினை இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர். இந்த காட்சி வீடியோவாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.