கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று செய்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து நயன்தாராவிடம் பேச்சு நடத்தியதும் உண்மை என தெரிகிறது.

ஆனால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டும் நடித்து வரும் நயன்தாரா, கமல் படத்தில் நடித்தால் தனது கேரக்டரின் முக்கியத்துவம் பாதிக்கப்படும் என்பதால் நடிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்காக ரூ.7 கோடி வரை தயாரிப்பு தரப்பு தர தயாராக இருப்பதாக கூறப்படுவதால் அவர் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.