‘லக்ஷ்மி, மா’ குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற சர்ஜுன்.கே.எம் இயக்கிய முதல் திரைப்படம் ‘எச்சரிக்கை’. இதனையடுத்து இயக்குநர் சர்ஜுன்.கே.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் படம் ‘ஐரா’. இதில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சிங்கிள் ட்ராக்கை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

-சிவா விஷ்ணு