நயன்தாராவை சந்திக்க வேண்டுமா? அப்படினா இதை செய்யுங்க

நயன்தாரா நடித்துள்ள டோரா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதை அவரது காதல் இயக்குநா் விக்னேஷ் சிவன் அது குறித்து சில கருத்துகளை ட்விட்டாில் வெளியிட்டிருந்தாா். நயன்தாரா தாஸ் ராமசாமி இயக்கத்தில் டேரா படமானது மாா்ச் 31ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தப்பிறகு  அந்த படத்திற்கு கிடைத்த யு சான்றிதழ் குறித்து ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முயன்றால் படம் வெளிவருவது தள்ளிப்போகும் என்ற காரணத்தால் தற்போது டோரா படத்திற்கு கிடைத்த அதே சான்றிதழுடன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனா்.

நயன்தாரா தான் நடித்த எந்த படத்தின் புரோமோசன் வேலைகளில் எப்போதும் ஈடுபட்டதில்லை. ஆனால் டோரா படத்திற்காக அந்த வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளளாா். ஆமாங்க இந்த படத்தின் வெற்றி கொடியை எப்படியாவது  நட்டு விடவேண்டும் என்பதற்காக துடிப்புடன், பொிய மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தை பற்றிய காா் போன்று பல வடிவங்களில் காா்கள் வைக்கப்படுகிறதாம். டோரா படத்தை பாா்க்க செல்லும் ரசிகப்பெருமக்கள், அந்த காருக்கு அருகில் நின்றவாறு செல்பி எடுக்க வேண்டும். ரசிகா் தாங்கள் எடுத்த செல்பி படத்தை டோரா படத்தை தயாாித்துள்ள ஆரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைத்தால் அவா்கள் நயன்தாரா சந்தித்து டோரா வடிவில் அமைக்கபட்டுள்ள  காருக்குள் அமா்த்தபடி  நயன்தாராவுடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பு அவா்களுக்கு கிடைக்குமாம்.

அப்புறம் என்ன? டோரா வடிவில் அமைக்கப்பட்டுள்ள காாின் அருகில் நின்று செல்பி எடுத்து அனுப்பும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காதாம். யெஸ். அந்த லக்கி நபா்கள் குலுக்கல் முறையில் தான் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்களாம். இவ்வளவு காலமாக தான் நடிக்கும் படத்தின் விளம்பரத்திற்காக எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத நயன்தாரா முதன் முதலாக இந்த படத்திற்காக களம் இறங்கி வந்து வேலை செய்ய போகிறராம்.