நயன்தாராவை கெஞ்சி கூத்தாடி போர்ச்சுக்கல் நாட்டிற்கு அழைத்து சென்ற நடிகர்

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற நயன்தாராவுக்கு தெலுங்கு மற்றும் மலையாள படவுலகில் இருந்து வாய்ப்புகள் வந்தபோதிலும் அவர் தமிழில் மட்டுமே முழுகவனம் செலுத்தி வருகிறார். தமிழில் நாயகிக்கு ஏற்ற கதையம்சம் கொண்ட கதை அதிகம் கிடைப்பதே இதற்கு காரணம் ஆகும்.

இந்த நிலையில் கோபிசந்த் நடிக்கும் ‘பாலம்’ என்ற தெலுங்கு படம் ஒன்றில் நயன்தாரா நடித்தார். இந்த படம் ஒருசில பிரச்சனைகளால் தாமதம் ஆனதால், நயன்தாரா கிட்டத்தட்ட அந்த படத்தையே  மறந்துவிட்டார்.

இந்த தனது மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்த கோபிசந்த் இந்த படத்தை எப்படியாவது முடித்துவிட முயற்சி செய்தார். நயன்தாராவின் பங்காக அவர் இரண்டு பாடல்களில் மட்டும் நடிக்க வேண்டியிருந்தது. இதனால் வேறு வழியின்றி நயன்தாராவிடம் அவரே பேசி கால்ஷீட் வாங்கிவிட்டார். இதன் காரணமாக இரண்டு பாடல்களின் படப்பிடிப்பிற்காக ‘வேலைக்காரன்’ படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு நேற்று போர்ச்சுக்கல் பறந்தார். அனேகமாக இம்மாத இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.