லேடி சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த பாடலை அவரது காதலரான விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

யோகி பாபு, நயன்தாரா, விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியாகியது. முதல் பாடலாக எதுவரையோ என்ற அறிமுக பாடல் காட்சி வெளியாகியது. பின் இரண்டாவதாக கல்யாண வயசு என்ற பாடலின் அறிமுக வீடியோவை அனிருத் வெளியிட்டார். இந்த பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடல் இரவு 7 மணிக்கு அனிருத் இணையத்தளத்தில் வெளியிட இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா போதை பொருள் கடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் யோகிபாபுவின் காதலை பார்த்து கடுப்பாகி இந்த பாடலை எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

யோகிபாபு வருவாரா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ரசிகா்களிடையே அதிகரித்துள்ளது. அதுவும் இயக்குனர் ப்ளஸ் நயனின் காதலர் விக்னேஷ் எழுதியுள்ள பாடல்வரிகளை கேட்கும் ஆவலில் உள்ளனர் ரசிகா்கள். ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு வீடு ஒரு அடிகூட தாங்காது என தொடங்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். காதல் ஜோடிகளான விக்னேஷ் நயன்தாராவின் படத்திற்கு நல்ல விளம்பர தூதுவராக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.