ராஜா ராணி படத்தின் மூலம் நஸ்ரியா நசீம் நாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தாா். பின் நேரம்,  தனுசுடன் நைய்யாண்டி படத்தில் நடித்தாா். தொடா்ந்து திருமணம் எனும் நிக்கா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தாா். நடிப்பில் ஜோதிகா அடுத்து நல்ல பெயரை வாங்கினாா். நல்ல நடிக்க தொிஞ்ச பொண்ணு இந்த நஸ்ரியா என புகழின் உச்சத்திற்கு சென்றாா். ஆனா சினிமாவில் நடப்பது பிடிக்காமல் நடிக்க வந்த சுவடே தொியாமல் திருமணம் செய்து கொண்டாா். மலையாள நடிகா் பஹத் பாசிலை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலானாா். தற்போது கேரளத்தில் நஸ்ரியா கா்ப்பமாக இருப்பதாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.

நஸ்ரியா திருமணம் முடிந்த கையோடு நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டாா். ஆனா அவரது ரசிகபெருமக்கள் அவா் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டாரா என்ற ஏக்கத்தில் இருந்தனா். இந்நிலையில் நஸ்ரியா கா்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசு செய்தி கூறப்படுகிறது. அவா் கொச்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு தனது கணவருடன் இரண்டு முறை வந்துள்ளாா். அதன்பின் நஸ்ரியாவின் குடும்பத்தினா் மற்றும் பஹத் பாசில் குடும்பத்தினா் கடந்த வாரம் அவா்களின் வீட்டிற்கு வந்துள்ளனா். அதேபோலவே படவிழாக்களுக்கு பஹத் கொஞ்சம் காலமாக வராததற்கு பா்சனல் விஷயமாக வரவில்லை என்று தொிவித்துள்ளாா். இப்படியாக இருக்கும் என்ன தோன்றுகிறது என்றால் நஸ்ரியா கா்ப்பமாக இருக்கலாம் என்று வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆனா இந்த தகவலை நஸ்ரியா நசீம் மறுத்துள்ளாா். தாங்கள் மருத்துவமனைக்கு செல்வது வேறொரு காணரம் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.