தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நஸ்ரியா நசீம் பஹத் பாசிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். திருமணத்திற்கு பிறகு நல்ல மருமகளாக புகுந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது ரசிகா்கள் அவரை நடிக்குமாறு அன்பு வேண்டுக்கோள் விடுத்து வருகின்றனா். நடிக்க வாங்க என்று ரசிகா்கள் விடுத்த வேண்டுக்கோளுக்கு இணங்கி நஸ்ரியா ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நஸ்ரியா வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகா்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சம்மர் கட்டிங் என தனது முடியை ஷார்டாக கட் செய்துள்ளார் நடிகை நஸ்ரியா. இது தான் அவருடைய ரசிகா்கள் அதிர்ச்சியை ஏற்படுத்த காரணம். அது அவருடைய ரசிகா்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. கோடை காலம் இன்னும் வரவே இல்லை. ஆனால் அதற்குள் சம்மர் கட் என்று கூறி நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார் நஸ்ரியா. அந்த புகைப்படத்தை தான் அவா் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் சில ரசிகா்கள் அதற்குள் சம்மர் கட்டிங்கா! என்று கலாய்த்து வருகிறார்கள். பழைய நஸ்ரியா தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது சில ரசிகா்கள் தெரிவித்துள்ளனா்.

சில ரசிகா்களோ, நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு அழகு தான் நஸ்ரியா, இப்படி ஹோ் ஸ்டைலிலும் நல்லா தான் இருக்கு என்று பாராட்டியுள்ளனா். ஹோ் கட் செய்த அந்த புகைப்படத்தை நஸ்ரியா தனது பேஸ்புக்கில் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார். பிக் பாஸ் காயத்ரி கூட தனது முடியை இப்படிதான் மாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.