தென்னிந்திய நடிகா் சங்கம் அவ்வப்போது வறுமையில் வாடி வரும் பழைய நடிகா், நடிகைகளுக்கு தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து வருகிறது. அண்மையில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோசுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000 கொடுத்து. இந்நிலையில் வறுமையில் தத்தளிக்கும் ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி செய்துள்ளது. பல படங்களில் நடித்த பாட்டி வேடத்தில் நடித்த திருமதி ரங்கம்மாள் பாட்டிக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் சார்பில் ரூபாய் 5000 கொடுத்து உதவி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா!

திருமதி ரங்கம்மாள் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து அதன் மூலம் வரும் வருவாய் 500ரூபாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் இவா் மெரினா பீச்சில் பிச்சை எடுத்து வருவதாக தகவல் வந்தது. இந்த செய்தியை கேள்வி பட்ட தென்னிந்திய நடிக் சங்க நிர்வாகிகள் ரங்கம்மாள் பாட்டியை மெரினா பீச்சிற்கு சென்று பார்த்த போது அவா் வருமானம் இல்லாத காரணத்தால் மெரினா கடற்கரையில் சின்ன எலக்ட்ரிக் பொருட்கள் வியாபாரம் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஒட்டி வந்தாக தெரிந்தது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகர் சங்கத்தின் மலேசியா நட்சத்திர கலைவிழா தேதி அறிவிப்பு

ரங்கம்மாள பட்டிக்கு தென்னிந்தி நடிகா் உதவி தொகையாக ரூபாய் 5000த்தை வழங்கியது. இவா் பெப்சி அமைப்பில் உள்ள ஜூனியா் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். தென்னிந்திய நடிகா் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் தான் உதவி தொகையை வழங்க முடியும். இருந்தபோதும் அவரது வறுமைப்போக்க எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று யோசித்து வருகிறார்கள் தென்னிந்திய நடிகா் சங்க நிர்வாகிகள். அவருக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்தும் பேசி வருகிறது.