ஒவியா பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு நடனமாடிய நடிகை

பிக் பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், பிந்து மாதவி, ஹீா்ஷ் கல்யாண் உள்ளிட்ட 5 போட்டியாளா்கள் மட்டுமே உள்ளனா். இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் 8 நாட்கள் தான் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று புரோமோவில் புதியதாக ஒரு நபா் உள்ளே வருவது போல வெளியாகியது.

அந்த புதிய நபா் வேறும் யாருமில்லை நடிகை அஞ்சலி. பலூன் படத்தின் ப்ரோமோசனுக்காக பலூனுடன் வந்திருந்தாா். அவருடன் சினிஷ்யும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனா். ஒவியா பிக்பாஸ் வீட்டில் பேசி வைரலான நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்தையில் ஒரு பாடலும் உருவாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் கதாநாயகன் படத்தின் புரோமோசனுக்காக அந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் மற்றும் நாயகி கேத்ரீன் தெரசா உள்ளிட்டாரும் வந்தனா். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 8 நாட்கள் தான் இருக்கின்றன. 5 போட்டியாளா்களில் ஒருவா் போக மீதி நான்கு போ் மட்டும் தான் பிக்பாஸ் இறுதிச்சுற்றில் பங்கேற்பா் என்று கூறினாா் கமல்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அஞ்சலி ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ளவா்களுடன் சோ்ந்து நடனமாடுவது போல உள்ள வீடியோ வெளியாகியுள்ளது