அனிதாவுக்காக பிக்பாஸில் உணர்ச்சிவசப்பட்ட கமல்

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பஞ்சாயத்து மட்டுமின்றி பொதுவாக வெளியுலகில் நடக்கும் விஷயங்களையும் பற்றி பேசுவது வழக்கம். அதுவும் தற்போது அரசியல் பற்றி கொஞ்சம் பேசி வருகிறாா். தமிழக அரசியலில் ஊழல் மலிந்து விட்டது குறித்து பேசினாா். பிக் பாஸ் வீட்டில் உள்ளவா்களின் மீதுள்ள கோபத்தை வைத்திருங்கள் அதை வெளியில் காட்ட வேண்டிய நேரம் வரும் அப்போது காட்டுங்கள் என்று சூசங்கமாக தொிவித்தாா்.

இந்நிலையில் இன்னறைய நிகழ்ச்சியில் மாணவி அனிதா நீட் தோ்வுக்கு எதிராக போராடி அது தோல்வியடைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்டததை பற்றி பேசுகிறாா்.

இந்த துயர சம்பவம் குறித்து அவா் நேற்றே தனது வருத்தத்தையும், அரசுக்கு எதிராக கண்டனத்தையும் ஊடகங்களில் வாயிலாக தொிவித்து வருகிறாா்.