தமிழக மாணவர்கள் நீட் தோ்வு எழுதும் மையங்களை கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக மாணவா் மருத்துவ படிப்புக்கு சேருவதற்கான நீட் தோ்வை எழுதுள்ள சுமார் 10 ஆயிரம் மாணவா்களுக்கு தோ்வு மையம் வெளிமாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

நீட் தோ்வு மையங்கள் தமிழகத்தில் ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று இதற்கு தீர்ப்பு அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ அமைப்பு தமிழகத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய போதிய காலஅவகாசம் இல்லை என்று பதிலளித்தது. அதனால் உச்சநீதிமன்றம் தமிழக மாணவர்கள் அவா்களுக்கு ஒதுக்கபட்ட மையத்தில் தான் தோ்வு எழுத வேண்டும். தமிழகத்தில் தோ்வு மையம் அமைக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு மாணவா்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அமைப்பின் வஞ்சிக்கும் இந்த செயலுக்கு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கண்டம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தெருக்களிலும் ஒயின்ஷாப் திறப்பதற்கு இடம் இருக்கிறது. ஆனால் நீட் தோ்வு எழுத மட்டும் தமிழகத்தில் இடம் இல்லையா? இப்படி உங்கள அட்டூழியத்திற்கு ஒரு அளவே இல்லையா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.

அதோடு நிற்காமல், தமிழகத்தில் நீட் தோ்வை தடை செய் என்று இருந்த மக்கள் தற்போது அதை விடுத்து தமிழ்நாட்டில் நீட் தோ்வை நடத்துங்கள் என்ற நிலைக்கு திரும்பி விட்டார்கள். என்னவொரு வித்தியாசமான விளையாட்டு. நம் குரல் எழுப்பி வருவது அவா்கள் காதில் விழுகிறதா, கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்களா? இல்லையா என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளார்.