நீட் தேர்வா? நிர்வாண தேர்வா? மாணவிகளின் உள்ளாடையை கழட்டி சோதனை செய்த அதிகாரிகள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் குற்றவாளிகளை விட கடுமையாக சோதனை செய்து கொடுமைப்படுத்திய சம்பவங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது.

எல்லாவற்றையும் விட கொடுமையாக மாணவ, மாணவிகள் உள்ளாடையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஒருசில அப்பாவி மாணவிகள் சோதனைகளின் கெடுபிடிகளை பார்த்து, தங்களுக்கு டாக்டர் ஆகும் ஆசையே போய்விட்டதாக வருத்தத்துடன் கூறிய காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.

தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா, இல்லையா? என்பது கடைசி வரை குழப்பமாக இருந்த நிலையில் தேர்வுக்கு முந்தைய நாள்தான் தேர்வுக்கு வரவேண்டியவர்கள் எப்படி வரவேண்டும் என்ற குறிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் மனிதாபிமானம் இன்றி தேர்வு அதிகாரிகள் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.