பாட்டில் மூடி சவாலை ஏற்று அதை நடிகை நீத்து சந்திரா அசத்தலாக செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் நடிகர் ஜேசன் ஸ்டதம் தொடங்கி வைத்ததுதான் இந்த பாட்டில் மூடி சவால். அதாவது காலை சுழற்றி தனக்கு முன்னாள் வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலின் மூடிய மட்டும் கழற்றி விட வேன்டும் என்பதுதான் அந்த சவால். இதை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர, பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்களிடையேயும் இந்த ஆர்வம் தொற்றியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் அதை செய்து தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை நீத்து சந்திரா இந்த சவாலை சிறப்பாக செய்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.