வரலட்சுமியின் ‘நீயா 2’ படத்தின் டைட்டில் லோகோ ரிலீஸ்

வரலட்சுமி, ராஜநாகமாக நடிக்கும் படம் ‘நீயா 2’. இந்த படத்தின் நாயகனாக ஜெய் மற்றும் நாயகிகளாக ராய்லட்சுமி, கேதரின் தெரசா ஆகியோர் நடித்து வருகின்றனர். எல்.சுரேஷ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லோகோ தற்போது வெளியாகியுள்ளது. நீயா என்ற டைட்டிலுக்கு நடுவே பாம்பு ஒன்று வளைந்து 2 என்பது போல் இந்த படத்தின் டைட்டில் லோகோ அமைக்கபப்ட்டுள்ளது.

மேலும் கமல், ஸ்ரீப்ரியா நடித்த ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த படம் அல்ல என்றும், இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.