சமூக வலைதளங்களில் ஒன்றான மியூசிக்கலி ஆப் மூலம் புகழ்பெற்றவர் சித்ரா கஜோல். அதில் வரும் ரொமாண்டிக்கான பாடல்கள் பலவற்றுக்கு இவரின் ரொமாண்டிக் மொமெண்ட்ஸ் சிரிப்பை வரவழைத்தது.

சிலர் பதிலுக்கு இணைந்து பாடுகிறேன் என்று காதை மூடி கொள்வது, காதில் இருந்து ரத்தம் வருவது போல் செய்வது, தூக்கு போட்டுக்கொள்வது போல நடிப்பது, வாயில் இருந்து ரத்தம் வந்து  இறப்பது போல நடிப்பது என பல்வேறு செயல்களை செய்தும் சித்ரா கஜோலை நெகட்டிவ் பப்ளிசிட்டியில் பெரிய விஐபி ரேஞ்சில் ஆக்கிவிட்டனர்.

இதற்கு முன் இப்படி ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியில் பெரிய நடிகர் ஆனவர் பவர்ஸ்டார் அவர்கள். சித்ரா அக்காவின் காமெடி டப்ஸ்மாஸ்கள் பற்றி அவரிடம் கேட்டதற்கு,

இந்த மாதிரி உங்க டப்ஸ்மாஸ் கிண்டல் பண்றாங்களே என்ற கேள்விக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்பு இந்த பப்ளிசிட்டியாலதான் நான் பெரிய லெவல்ல வந்தேன். சினிமா வாய்ப்புகள் கூட வரக்கூடிய நிலையில் இருக்கிறது.

லாரன்ஸ் சார்தான் எனக்கு மிகவும் பிடித்தவர் அடுத்த பிறவின்னு இருந்தா லாரன்ஸ் சார் எனக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் ஏனென்றால் அவர்தான் அம்மாவுக்கு கோவில் கட்டி இருக்கார்.

அவரின் படத்தில் அம்மா கேரக்டரில் கோவை சரளா நடித்த கேரக்டரில் நடிக்க ஆசை லாரன்ஸ் சார் கோவை சரளா மடியில் ஏறி அமர்வது போல என் இடுப்பில் வந்து அமர்ந்து கொள்ள வேண்டும் அது போல காமெடி கேரக்டரில் நடிக்க ஆசை. இதை லாரன்ஸ் பார்த்து கொண்டிருந்தால் கண்டிப்பா வாய்ப்பு தருவார்னு நினைக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

லாரன்ஸ் வாய்ப்பு தராவிட்டாலும் இவர் சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்கப்போவது மட்டும் உறுதியாக தெரிகிறது.