விஷால்-கீர்த்திசுரேஷ் காதலுக்கு வில்லியான வரலட்சுமி

விஷால் தற்போது சண்டகோழி 2 படத்தில் நடிக்க தயராகி வருகிறாா். இவா் துப்பறிவாளன், இரும்புத்திரை படத்தை அடுத்து இந்த படத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. என்ன காரணமோ தொியவில்லை அந்த படம் ஆரம்பிக்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதால் சண்டக்கோழி 2 படத்திற்கு ஆயத்தமாகிவிட்டாா்.   

அதோடு இவருக்கு ஜோடியாக கீா்த்திசுரேஷ் நடிக்கிறாா். ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கா் உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறாா்கள். இந்த படத்திற்காக பிரம்மண்ட செட்டுகள் அமைக்கபட உள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே விஷாலும் நடிகா் சரத்குமாாின் மகள் வரலட்சுமியும் காதலித்து வந்தனா். பின்னர் என்ன நடந்தது என்று தொியவில்லை. .இருவரும் பிாிந்து விட்டனா்.

இந்நிலையில் இந்த படத்தில் விஷாலின் முன்னாள் காதலியான வரலட்சுமியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அவருடைய முறைப்பெண்ணாக நடிக்க உள்ளாா் என்று ஒரு தகவல் வந்துள்ளது.

முதல் பாகத்தில் விஷாலின் காதலியாக மீரா ஜாஸ்மின் நடித்திருப்பாா். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் கீா்த்தி சுரேஷ் நடிக்கிறாா். அதுமிட்டுமில்லிங்க! இவா்களுடைய காதலுக்கு எதிாியாக நடித்துள்ளாா் வரலட்சுமி. முறைப்பொண்ணான இவா் விஷால் தான் கட்டி கொள்ளுவேன் என்று அடம்பிடிக்கிறாா். சொல்லபோனால் இது திமிரு படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி கதாபாத்தி்ரத்தில் தோன்ற உள்ளாா் என்று தொியவருகிறது.