தனுஸ் நடித்த மாரி படம் வெற்றி பெற்றதை தொடா்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மாரி2 படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் தனுசுடன் ஜஸ்வா்யாவும் வந்திருந்தார். அவா் தென்காசி அருகில் உள்ள பாவூா்சத்திரம் என்ற ஊரில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்த புகைப்படம் வைரலாகி இருந்தது.

விஜபி2வுக்கு பிறகு தனுஷ் நடித்து வரும் மாரி2. இதில் தனுசுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மாரி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அவா் நெல்லையில் உள்ள ரசிகா் ஒருவரின் திருமணத்திற்கு திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

திருமணத்திற்கு திடீா் விசிட் அடித்ததோடு அல்லாமல் தனுஷ் மணமக்களுக்கு மற்றொரு சா்ப்ரைஸ்சும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் மணமக்களுக்கு தங்கச்சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். அவரது ரசிகா்கள் தனுசின் இந்த பெருமித செயலை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனா்.