நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த பள்ளி மாணவா் தினேஷ் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், தனது தந்தை குடிபழக்கத்தை நிறுத்த கோரியும், அதுபோல டாஸ்மாக் கடையை பிரதமர் மற்றும் தமிழக முதல்வா் மூடக்கோரியும் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை மேம்பாத்தில் தினேஷ் தூக்கில்தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். 17 வயது மாணவர் வருகிறத நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவா் தற்கொலை செய்து கொண்டது சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் துயரம் இன்னும் தீராத நிலையில் இப்படியொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கர் கோவிலைச் சேர்ந்த தினேஷ் என்ற பள்ளி மாணவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் அவரது குடிப்பழக்கத்தை நிறுத்த கோரி தான் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதுபோல டாஸ்மாக் கடைகளை மூட உடனடியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்படி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என்றால் தான் ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை அழிப்பேன் என்று அந்த தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளார். அதுபோல தனது இறுதிச் சடங்கை தந்தை செய்யக்கூடாது என்றும் மணி அப்பா தான் செய்ய வேண்டும் உருக்கத்துடன் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது தந்தை இதற்கு பின் திருத்த வேண்டும் என்றும், அப்போது தனது ஆன்மா சாந்தியடையும் என்றும், தந்தை திருத்தவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படியொரு சோகமான சம்பவம் நெல்லை மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையின் குடிப்பழக்கத்தால் ஒரு உயிர் பிரிந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.