செல்வராகவன் படத்திற்கா இந்த கதி?

11:40 காலை


செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா,ரெஜினா மற்றும் நந்திதா நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர்  ராஜா இசையமைத்தார்.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுடன் இணைந்து கௌதம் மேனன் தயாரித்துள்ள இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டன. பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்று வரை உறுதியான தேதி தெரியவில்லை.

Loading...

இந்த நிலையில் செல்வராகவன் இப்படம் குறித்து டுவிட்டரில் கூறுகையில், உங்களுடைய விசாரிப்புகள் என் நெஞ்சைத்  தொட்டுவிட்டன. மிக விரைவில் படம் வெளிவரும். இந்தப் படம் தயாரிப்பாளர் மதன் படம். எப்போது சிறந்ததாகக் கொடுக்க  வேண்டும் என அவருக்குத் தெரியும். படத்தின் ரிலீஸ் தேதி இயக்குநர்கள் கையில் இல்லை என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல உணர்வுகள் கொண்ட படங்களை எடுத்த செல்வராகவன் படத்திற்கா இந்த நிலை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்

(Visited 74 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com