ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டிய நெப்போலியன் நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் படம் ‘யாகம்’. இப்படத்தை ஷங்கரின் உதவியாளர் நரசிம்மா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயப்பிரதா நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஆகாஷ் குமார், மிஸ்தி சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோட்டி என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்று சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இப்படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அப்படியிருக்கையில், இப்படத்தை தொடங்குவதற்கான பூஜையை ஆந்திராவிலுள்ள 108 நரசிம்மர் கோயில்களில் நடத்தியுள்ளனர். சாதாரணமாக ஒரு படத்திற்கு ஒரு இடத்தில்தான் பூஜை செய்வார்கள், ஆனால் இப்படத்திற்கு 108 இடங்களில் பூஜை நடந்தது அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல், அமெரிக்காவிலும் இப்படத்திற்கான பூஜையை தனது வீட்டிலேயே நடத்தியுள்ளார் நெப்போலியன்.

பூஜையிலேயே பிரம்மாண்டம் காட்டியுள்ள இப்படக்குழு கண்டிப்பாக படத்திலும் அந்த பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தில் நெப்போலியன் ஒரு பாடலும் பாடியிருக்கிறாராம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.