அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் இன்னும் முடியாமல் உள்ளதற்கு தயாரிப்பாளர் சொல்லும் இமாலயத் தொகையேக் காரணம் என சொல்லப்படுகிறது.

விஸ்வாசம் படத்துக்கு பிறகு அஜித்தின் அடுத்தப் படமாக பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் உருவாகியுள்ளது. வழக்கமான அஜித் படங்களுக்கு எதிராக படப்பிடிப்பு பணிகள் சீக்கிரமே முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்டு 8 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.

ரிலிஸுக்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இந்தப்படத்தின் வியாபாரம் இன்னும் முடியாமலேயே உள்ளது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் போனிக் கபூர் சொல்லும் விலையே. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் படம் மிகப்பெரிய வசூலைக் கொடுத்ததால் இந்தப்படத்துக்கு தமிழக விநியோக உரிமையாக 50 கோடி ரூபாய் நிர்னயித்துள்ளாராம் போனி கபூர். ஆனால் விஸ்வாசம் மாஸ் மசாலாப் படம். நேர்கொண்ட பார்வை யோ கிளாஸானப் படம். இது புறநகர் தியேட்டர்களில் விஸ்வாசம் அளவுக்கு இந்தப் படம் ஓட வாய்ப்பில்லை என நம்புகின்றனர் விநியோகஸ்தர்கள். எனவே 40 கோடி தான் இந்தப்படத்துக்கு அதிகபட்சம் என நினைத்து தயாரிப்பாளர் வழிக்கு வரட்டும் என அமைதியாக உள்ளனர். அதனால் இன்றுவரை நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக திரையங்க விநியோகஸ்த உரிமை விற்பனையாகவில்லை.