இன்றும் தொடர்கிறது பாகுபலியின் வசூல் சாதனை

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்திய சினமாவை உலக அரங்கில் பேச வைத்து, இந்தயாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் வசூலில் சாதனைப் படைத்த படம் பாகுபலி 2 என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் படத்தின் சாதனைகள் இதோடு முடியவில்லை. வெளியாகி 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை இந்தப் படம் பல வழிகளில் பல வசூல்களை ஈட்டி வருகிறது.

இணையவழி வீடியோக்களைத் திரையிடும் உலகின் 9 ஆம் இடத்தில் உள்ள ‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம்சமீபத்தில் பாகுபலி படத்தை தனது பயன்பாட்டில் திரையிடுவதற்கான உரிமையை 25.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.  சமீப காலமாக தங்கல், பாகுபலி போன்ற இந்திய படங்கள் உலகத்திரையரங்குகளில் திரையிடப்படுவது மற்றும் மேற்கத்தியர்கள் நம் படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாலும்‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம் இந்தியா திரைப்படங்கள் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. “அதிக வசூல் ஈட்டும் இந்திய படங்களில் இந்நிறுவனம் முதலீடு செய்யும்” என்று இதன் துணைத் தலைவர்,ஜெசிகா லீ, (தொடர்புத்துறை) தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் மும்பையில் இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உழைப்பு என்றைக்கும் கைகொடுக்ங்கறது இதுதான் போல.

Keyword: