இந்திய மக்களால் நேதாஜி என அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் 1897ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வங்காள தேசம் கட்டாக் என்கிற இடத்தில் பிறந்தார்.

இன்று நாடு முழுவதும் அவரின் 123வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர் நேதாஜி. லண்டன் என்று ஐ.சி.எஸ் (இப்போதையை ஐ.ஏ.எஸ்) படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். ஆனால், வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக பணி செய்ய பிடிக்காமல் பட்டத்தை வாங்காமலேயே இந்திய திரும்பினார். காங்கிரஸ் கட்சியிலும் இணைந்து, நேருவுக்கு நெருக்கமான நண்பரானார்.

சுதந்திர போட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். “சட்டமன்றங்களை கைப்பற்றினால் மட்டுமே போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாக போராட வேண்டும். நாமும் ஆயுதம் ஏந்தி வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும்” என முழங்கினார். அவரின் புகழ் நாடெங்கும் பரவியது. ஆனால், நேதாஜியின் தீவிரவாதப்போக்கு சில காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக காந்திஜிக்கு பிடிக்கவில்லை.

அவருக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனாலும் காங்கிரஸுன் இணைந்து பணியாற்ற பார்வார்டு பிளாக் என்கிற அமைப்பை உருவாக்கினார். இரண்டாம் உலகப்போர் மூண்ட போது இந்திய மக்களின் ஒத்துழைப்பை பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜியோ பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முயன்றார். இதனால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2ம் உலகப்போரின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் படைகள் தோல்வியை சந்தித்தது. இதைப்பயன்படுத்தி பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்க நேதாஜி திட்டமிட்டார். அதனால், சிறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு விடுதலை ஆனார். 1941ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி மாறுவேடத்தில் இத்தாலி செல்ல திட்டமிட்டார். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆயிற்று. எனவே, ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து பேசி இந்தியாவின் விடுதலைக்கு உதவி கேட்டார். அதேபோல், மலேசியா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கு சென்றும் உதவி கோரினார்.

கல்லூரி காலத்திலேயே தேசிய மாணவர் படையில் ராணுவ பயிற்சி பெற்றிருந்ததார். எனவே, போர் வியூகங்கள் அவருக்கு சுலபமாக இருந்தது. அவருடைய போர்த்திறன் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. கொஞ்சம் ரத்தத்தை கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரத்தை நான் கொடுக்கிறேன் என நாட்டு மக்களிடம் முழங்கினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17ம் தேதி பாங்காக் நகரிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டார். அதுவே, அவரின் கடைசி பயணமாக இருந்தது. விமான விபத்தில் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. 18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, பர்மோசா தீவில் அவரின் விமானம் விபத்துக்குள்ளானதாக ஜப்பான் ரேடியாவில் செய்தி வெளியானது.

இது இந்திய மக்களை நிலைகுலைய செய்தது. ஆனால், அவரின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, அவர் உயிருடன் இருக்கிறார் என பலரும் நம்பினர். அவர் மரணம் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியா, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில் விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மைதான் என அறிக்கை அளித்தனர். இப்போதும், அவரது மரணத்தில் மர்மமே நிலவுகிறது.

வருகிற 26ம் தேதி நாடு குடியரசு தினத்தை கொண்டாடவுள்ளது. இன்று வரையும் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக வாழும் சுபாஷ் சந்திரபோஸை அவரின் பிறந்த நாளான இன்று நினைவு கோர்வோம்..