கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2இல் போட்டியாளர்களில் பிரபலமானவர்களுள் ஒருவர் யாஷிகா ஆனந்த். இந்நிகழ்ச்சியில், இவர் ஐஸ்வர்யா தத்தாவுக்கு கண்மூடித்தனமாக கொடுத்த ஆதரவால், டைட்டில் வின்னர் ஆகமுடியாமல் போனது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த ஷோவில் இவர் கேமிரா முன்பு நின்று (மொக்க) ஜோக்குகள் சொல்லி வந்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபிறகும் யாஷிகா , தற்போது மீண்டும் தொடர்ந்து ஜோக்ஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அப்படி அவர் அண்மையில் கூறிய ஜோக்ஸ் என்னவென்றால், ‘நான் என்னுடைய மொபலை கீழபோட்டேன். ஆனால் அது கீழ லேண்ட் ஆகவில்லை. ஏனென்றால், போன் ஏர்பிளான் மோடு இல் இருந்தது’ என கூறியிருந்தார்.

இந்த விடியோவை மூன்று இலட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அப்படி பார்த்தவர்களில் பலர் இந்த மாதிரி மொக்க ஜோக்ஸ் சொல்லி எங்களை கொல்றதை நிறுத்துங்க என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.