Chinmayi – வைரமுத்துவை பற்றி பேசுவதை தவிர உனக்கு வேறு வேலை இல்லையா என நெட்டிசன் ஒருவர் சின்மயியிடம் பொங்கி எழுந்துள்ளார்.

டிவிட்டரில் மீ டூ இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து, ராதாரவி மற்றும் பலர் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி.

இந்நிலையில், தொடர்ச்சியாக எப்போதும் அவர் வைரமுத்து பற்றி பேசிக்கொண்டே இருந்தததால் கடுப்பான ஒரு நெட்டிசன் “இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. வைரமுத்துவை திருமணம் செய்து கொள். வைரமுத்துவை பற்றி பேசுவதை தவிர உனக்கு வேறு வேலையே இல்லையா? நீ பாஜகவை சேர்ந்தவள் என்பது எங்களுக்கு தெரியும்” என காட்டமாக டிவிட் போட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி ‘என்ன ஒரு அறிவுரை.. எனக்கு ஆர்வமில்லை’ என டிவிட் செய்துள்ளார்.