அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை மிகவும் கீழ்தரமாக விமர்சித்த யுடியூப் விமர்சகர் ப்ளூசட்ட மாறனுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியானது. பெண்களின் சுதந்திரம் பற்றி பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்மறையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது.

ஆனால், தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் ப்ளூ சட்டமாறன் இப்படத்தை வழக்கம் போல் மிகவும் கிண்டலடித்து விமர்சித்தார். இப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் கூறியிருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் கொதிப்படைந்து அவரை கண்டபடி திட்டி கருத்துகளை கூறி வருகின்றனர்.

திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கிறது. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஆண் சமூகம் அவர்களை பார்க்கும் பார்வை அனைத்தும் இப்படத்தில் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, இப்படி காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்யக்கூடாது என அவரை பலரும் திட்டை வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர் ‘கலாச்சாரத்தின் பெயரில் கீழ்த்தரமான கருத்துகளை கூறுவதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம். பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் விவகாரத்தில் தமிழ் கலாச்சாரம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. படம் வெளியான அன்றே மாபெரும் வரவேற்பு இருந்தது. இதுவே அதற்கு உதாரணம் என பதிவிட்டுள்ளார்.