பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் பற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படமும் பொங்கல் விருந்தாக இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இரு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  விசிலடிக்க விஸ்வாசத்தில் காட்சிகள் நிறைய உண்டு- படத்தின் ஒளிப்பதிவாளர்

நெட்டிசன்கள் பலரும் இரு படங்களையும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். பேட்ட படத்தில் பழைய ரஜினி ஸ்டைலை பார்ப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் செண்டிமெண்டான பல காட்சிகளில் அஜித் கலக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ பேட்ட படத்தை இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுத்திருக்கலாம். விஸ்வாசத்தை எடுக்கமாலே விட்ருக்கலாம்’ என அவர் டிவிட் போட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.