பிரபல பத்திரிகையான விகடன், 2017ஆம் ஆண்டிற்கான திரை நட்சத்திரங்களுக்கான விருதுகளை சற்றுமுன் அறிவித்தது. இதன்படி சிறந்த நடிகருக்கான விருது இளையதளபதி விஜய்க்கு கிடைத்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த அறிவிப்பில் இருந்த விஜய் பெயரை எடுத்துவிட்டு அதில் அஜித் என்று பதிவு செய்து மெர்சல் படத்திற்கு பதிலாக விவேகம் படத்தை மாற்றி நெட்டிசன்கள் தங்கள் சேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

அச்சு அசலாக விகடன் பெயரில் ஒரு டுவிட்டர் அக்கவுண்டையும் ஆரம்பித்து இதை பதிவுசெய்துள்ளனர். இந்த இரண்டையும் மாறி மாறி பார்த்து வரும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது