kasturi
kasturi

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு ஏதாவது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. எப்போதும் வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி ஏதாவது ஒரு செய்தியை பற்றி தனது கருத்தினை ட்வீட் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். அப்படி அவர் பதிவிடும் கருத்து சில சமயம் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கும், கேலிக்கும் வித்திடும். அப்படி தான் தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார். அப்படி கஸ்தூரி ட்வீட் செய்தது நெட்டிசன்களை கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிள்ளார். அது என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஐந்து பெண்களுக்கிடையில் ஒரு ஆண் போட்டியாளரான தாடி பாலாஜி மட்டும் தான் இருக்கிறார். எனவே இதை பற்றி மும்தாஜ் கூட லேடிஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன் தான் பாலாஜி என்று அவர் கடந்த வாரம் வெளியேறும் போது தெரிவித்திருந்தார்.

ஐந்து பெண்கள் இருக்கும் வீட்டில் ஒரு ஆண் இருப்பது பற்றி நடிகை கஸ்தூரி விமர்சித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த கருத்து தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தி பூத்தது போல இன்னிக்கு பிக்பாஸ் 2 பார்த்தேன். அதில் விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா ஆனந்த் என ஐந்து பெண்களுக்கு நடுவுல பாலாஜி மட்டும். கண்டிப்பா பாஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத்தான் நல்ல சான்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் அவருக்கு தக்க பதிலை கொடுத்து வருகின்றனர். ஐந்து பெண்களுக்கு மத்தியில் ஒரு ஆணாக இருந்தாலும் பாலாஜி கவுரவமாக நடந்து கொண்டிருக்கிறார். உங்க புத்தி ஏன் இப்படி போகிறது என்று நெட்டிசன்கள் கோபத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த மாதிரி ஒரு கருத்தை ஒரு நடிகர் செய்திருந்தால் தற்போது பெரிய பிரச்சனையே நடந்திருக்கும் என்று ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அதாவது 5ஆண்டுகளுக்கு மத்தியில் ஒரு பெண் இருந்து இப்படி ஒரு கருத்தை ஒரு நடிகர் போட்டிருந்தால் மாதர் சங்கத்திலிருந்து எல்லா அமைப்புகள் களம் இறங்கியிருக்கும். அதோடு நீங்களே ஆம்பளைங்க புத்தி இவ்வளவு வக்கிரமாக இருக்குனு சொல்லுவீங்க. ஆம்பளைக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒன்னு!! வேணும் சம உரிமை ஆண்களுக்கு என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் நெட்டிசன்கள் நீங்க எல்லாம் அண்ணன், தம்பி கூட பிறக்கலையா?. நம்மல மாதிரி நினைக்க கூடாது சொர்ண அக்கா. உங்களிடமிருந்து இப்படி ஒரு ட்வீட்டை எதிர்பார்க்கல என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.