பிக்பாஸ் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசனே இந்த தொடரையும் தொகுத்து வழங்குகிறார். சில நாட்களாக தொய்வாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போதுதான் போட்டியாளர்களுக்குள் சில மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இனி வரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு முன்னணி நடிகை வர உள்ளார். அது ஸ்ருதிஹாசன் என்பது உற்உதி ஆகியுள்ளது. விஸ்வரூபம் 2 பாடல்கள் வெளியீட்டிற்காக அவர் வருகிறார் என கூறப்படுகிறது.