பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா சென்ற பின்னர் அம்மா இல்லாத அதிமுக போன்றும், சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் போன்றும் களையிழந்து காணப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் செம அடி வாங்கியுள்ளது. யாரும் ஓட்டு போடுவதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. சுமார் 25% பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர். இது இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த ஓவியா அல்லது வேறு பிரபல நடிகையை உள்ளே அனுப்பி வைக்க கட்டாயத்தில் நிர்வாகம் உள்ளது. ஓவியா மீண்டும் உள்ளே வர மறுத்துவிட்டதால் பல கோடிகள் கொடுத்து ஒரு பிரபல நடிகையை சம்மதிக்க வைத்துள்ளார்களாம். அவர் வரும் ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேலாவது இந்த நிகழ்ச்சி களைகட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்